நடிகர் சிவகார்த்திகேயன் 
செய்திகள்

முகுந்த் வரதராஜனை பிராமணராக ஏன் காட்டவில்லை? இயக்குநர் விளக்கம்!

அமரன் படத்தின் சர்ச்சை கேள்விகளுக்கு இயக்குநர் பதில்...

DIN

அமரன் திரைப்படத்தின் சர்ச்சைகளுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பதிலளித்துள்ளார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 அன்று திரையரங்குகளில் வெளியானது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிராமணரான முகுந்த் வரதராஜனை திரைப்படத்தில் அடையாளப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் எழுந்தது. தமிழ் சினிமாவில் பிராமணர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்கிற அளவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (நவ. 4) அமரன் படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் முகுந்த் வரதராஜன் பிராமணராக அடையாளப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு, “முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்னிடம், முகுந்த்தை தமிழராக அடையாளப்படுத்தவும், படத்தில் தமிழ் சாயல் கொண்ட நடிகரைப் பயன்படுத்துங்கள் என்றும் கோரிக்கை வைத்தார். அமரன் படத்திற்காக முகுந்த் குடும்பத்தினரை சந்தித்தபோது அவரின் பெற்றோர் முகுந்துக்கு இந்தியன், தமிழன் என்கிற அடையாளம் மட்டும் போதும் என்றனர்.

அமரன் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி.

அதேபோல், முகுந்த் பல சூழலிலும் தன்னை இந்தியன் என்றே முன்னிலைப்படுத்தியிருக்கிறார். பாரதியாரின் ’அச்சமில்லை, அச்சமில்லை’ பாடல் அனைத்து மொழிகளிலும் தமிழில்தான் இருக்கிறது. இது, முகுந்த் வரதராஜனை கொண்டாட எடுக்கப்பட்ட படம் என்பதால் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. பிரித்துப் பார்க்க எந்த தேவையும் இல்லை. அதையும் தாண்டி, அசோக் சக்ரா விருதைப் பெற்ற முகுந்த் வரதராஜனின் பணிக்கும், தியாகத்துக்கும் அமரன் திரைப்படம் மரியாதை செய்திருக்கிறது என்றே நினைக்கிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT