செய்திகள்

விஜய் - 69: வெளிநாட்டு உரிமத் தொகையில் சாதனை!

விஜய் - 69 படத்தின் வெளிநாட்டு உரிமம் குறித்து...

DIN

விஜய் 69-வது படத்தின் வெளிநாட்டு உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக கேரள மாநிலம் பைய்யனூரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகளை எடுத்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் குத்து பாடலாக உருவாகியுள்ளதாம்.

தற்போது, படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விஜய் - 69 படத்தின் வெளிநாட்டு வெளியீட்டிற்கான உரிமத்தை துபையைச் சேர்ந்த பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இதுவே, தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட திரைப்படம் எனக் கூறுகின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT