செய்திகள்

ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியான ஓவியா!

ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் அறிவிப்பு...

DIN

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் தமிழ்ப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்பஜன் சிங் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழில் பிரண்ட்ஷிப் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியில் விளையாடிய காலத்திலிருந்து தமிழ் மொழியைக் கற்பதிலும் எக்ஸ் தளத்தில் தமிழிலில் பதிவுகளை வெளியிட்டும் தன் தமிழ் ஆர்வத்தை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், நாயகனாக புதிய தமிழ்ப் படத்தில் டாக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா என்கிற கதாபாத்திரத்தில் ஹர்பஜன் நடிக்கிறார். ஜான் பால் ராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு சேவியர் எனப் பெயரிட்டுள்ளனர்.

நாயகியாக நடிகை ஓவியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விடிவி கணேஷ் மற்றும் ஜிபி முத்து ஆகியோர் நடிக்கின்றனர்.

இதுகுறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், ”என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் சேவியர். உங்களை மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

SCROLL FOR NEXT