நடிகர் டெல்லி கணேஷ் (கோப்புப்படம்) 
செய்திகள்

டெல்லி கணேஷ் உடல் தகனம்!

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது பற்றி...

DIN

மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். சென்னை ராமபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், சென்னை ராமபுரத்தில் உள்ள டெல்லி கணேஷின் இல்லத்தில் இருந்து அவரது உடல் இன்று காலை 10 மணியளவில் நெசப்பாக்கம் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் டெல்லி கணேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.


இதையும் படிக்க : காலம் தந்த கலைக் கொடை!

விமானப் படை மரியாதை

திரைத்துறையில் நடிப்பதற்கு முன்னதாக 1964 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் இந்திய விமானப் படை வீரராக டெல்லி கணேஷ் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், ராமபுரம் இல்லத்தில் இருந்து டெல்லி கணேஷின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, அவரின் உடலுக்கு விமானப் படை கொடி போர்த்தி வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT