லக்கி பாஸ்கர்  
செய்திகள்

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் லக்கி பாஸ்கர்!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கவுள்ளது.

DIN

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கவுள்ளது. கடந்த 11 நாள்களில் ரூ. 96.8 கோடி வசூலித்துள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது.

முழு தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தமிழ், மலையாளம், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ளார்.

மும்பை பின்னணியில் உள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் முழுக்க முழுக்க அரங்குகள் அமைத்து எடுக்கப்பட்டுள்ளது. வீடு முதல் வங்கி வரை அனைத்துமே செயற்கை அரங்குகள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், துல்கர் சல்மானின் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான வசூலை லக்கி பாஸ்கர் படம் ஈட்டியுள்ளது.

கடந்த 11 நாள்களில் மட்டும் ரூ.96.8 கோடியை லக்கி பாஸ்கர் திரைப்படம் வசூலித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT