செய்திகள்

இந்திய திரைப்பட விழா: தங்க மயில் போட்டியில் 3 இந்திய படங்கள்!

55ஆவது இந்திய திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான பட்டியலில் 3 இந்திய படங்கள் உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன.

DIN

கோவாவில் வரும் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது.

இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்க மயில் விருதுக்கான போட்டியில் 3 இந்திய படங்கள் உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன. 12 வெளிநாட்டு படங்களும் இதில் அடங்கும்.

இந்தாண்டு தங்க மயில் விருதுக்கான நடுவர் குழுவில் இந்திய இயக்குநர் அஷ்டோஷ் கோவாரிக்கர், சிங்கப்பூர் இயக்குநர் ஆண்டனி சென், ஆங்கில-அமெரிக்கன் தயாரிப்பாளர் எலிசபெத் கார்ல்சென், ஸ்பானிஷ் தயாரிப்பாளர் பிரான் போகியா, ஆஸி. எடிட்டர் ஜில் பில்காக் இருக்கிறார்கள்.

இந்த நடுவர் குழுவினர்தான் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்வார்கள். வெற்றி பெருபவர்களுக்கு ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும்.

தங்க மயில் விருதுக்கான போட்டியில் உள்ள படங்கள்

ஈரான் - பியர் & டிரெம்ப்லிங்

துருக்கி - குலிஜார்

பிரான்ஸ் - ஹோலி கவ்

ஸ்பெயின் - ஐ ஏம் நெவேன்கா

அமெரிக்கா - பனோப்டிகான்

சிங்கப்பூர் - பியர்ஸ்

துனிசியா - ரெட் பாத்

கனடா, பிரான்ஸ் - ஷெப்பர்ட்ஸ்

ரோமானியா - தி நியூ இயர் தட் நெவர் கம்

லிதுனியா - டாக்ஸிக்

சீக் ரிபப்ளிக் - வேவ்ஸ்

துன்சியா, கனடா - ஊ டூ ஐ பிளாங் டூ

இந்தியா - தி கோட் லைஃப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகுச் சங்கமம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்!

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திமுகவுக்கு கசக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தோல்விக்கு பிராயச்சித்தம்: பிரசாந்த் கிஷோர் மெளன விரதம்!

உடல் எடையைக் குறைத்த கிரேஸ் ஆண்டனி!

SCROLL FOR NEXT