செய்திகள்

காந்தாரா சேப்டர் - 1 வெளியீட்டுத் தேதி!

காந்தாரா சேப்டர் - 1 அப்டேட்..

DIN

காந்தாரா சேப்டர் - 1 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.

கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். தற்போது, தென்னிந்தியளவில் பிரபலமான நடிகராகியுள்ளார். ஹனுமன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையே, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானதுடன் வேறெந்த புதிய அப்டேட்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகி வரும் காந்தாரா சேப்டர் - 1 திரைப்படம் அடுத்தாண்டு (2025) அக். 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

இடையூறு விலகும் இவர்களுக்கு.. தினப்பலன்கள்!

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை உண்டியல் காணிக்கை ரூ. 1. 78 கோடி

SCROLL FOR NEXT