அமரன் ரூ. 300 கோடி வசூல்?
அமரன் திரைப்படத்தின் வசூல் நிலவரம்....
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ரூ. 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கோவாவில் திருமணம்?
அமரன் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் இம்மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.
ஆனால், தற்போது வரை படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பால் அமரன் ஓடிடி தேதியை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனராம்.
இந்த நிலையில், அமரன் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலால் தமிழ் திரையுலகம் ஆச்சரிப்பட்டு வரும் நேரத்தில் தன் 22-வது படத்திலேயே ரூ. 300 கோடி வசூலித்த முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையும் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.