இந்தியன் 2 போஸ்டர், ஆர்ஜே பாலாஜி.  
செய்திகள்

சிங்கத்துக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருக்கலாம்..! ஆர்ஜே பாலாஜி!

நடிகர் ஆர்ஜே பாலாஜி இந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்தது குறித்து பேசியுள்ளார்.

DIN

நடிகர் ஆர்ஜே பாலாஜி இந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்தது குறித்து பேசியுள்ளார்.

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் வெற்றி பெற்றது. அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார்.

இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கிற படத்தில் நடித்திருந்தார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், சொர்க்கவாசல் பட புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது:

இந்தியன் 2 படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கமல் சார் ஷங்கர் சார் இருக்கிறார்கள் என்ற ஆசை இருந்தது. ஆனால், அந்தப் படத்தில் ஏற்கனவே பல நாயகர்கள் இருக்கிறார்கள். சுந்தர்சி சார் சொல்வதுபோல சிங்கத்துக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருக்கலாம் எனத் தோன்றியது.

மற்றவர்கள் படத்தில் 5-6 நிமிடம் நடிப்பதைவிட என்னை நம்பி படம் எடுப்பவர்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதனால் இந்தியன் 2, படத்தில் நடிக்கவில்லை என்றார்.

லோகேஷ் கனகராஜும் சில படங்களில் நடிக்க கேட்டார். என்னால் நடிக்கமுடியவில்லை என ஆர்ஜே பாலாஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT