செய்திகள்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த பாடல் அறிவிப்பு!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அப்டேட்...

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அடுத்த பாடலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியானது. இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல், ரசிகர்களிடம் கவனம் ஈர்த்ததுடன் யூடியூபில் 8.2 கோடி (82 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ’காதல் ஃபெயில்’ பாடலை நவ. 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

SCROLL FOR NEXT