மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமணப் படத்தில் சினிமா காட்சிகள்... தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!

நடிகை நயன்தாராவின் புதிய அறிக்கை....

News image
Updated On :20 நவம்பர் 2024, 12:55 pm

DIN

திருமண ஆவணப்படத்திற்காக திரைப்பட காட்சிகளுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டதற்கு தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் ரசிகர்களிடம் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானது.

இதில், நானும் ரௌடிதான் படத்தின் 10 விநாடி நேரம் கொண்ட படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருந்த சூழலில், சம்பந்தப்பட்ட படத்தின் காட்சியை நெட்பிளிக்ஸ் பயன்படுத்தியுள்ளதால் தனுஷ் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Story image

இந்த நிலையில், நயன்தாரா தன் திருமணப் படத்தில் தான் நடித்த சினிமா படங்களின் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Story image

அறிக்கையில் நடிகர் ஷாருக்கான், உதயநிதி ஸ்டாலின், லைகா, வேல்ஸ் இண்டர்நேஷனல், ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர் நடித்த பிறமொழி தயாரிப்பு நிறுவனங்களையும் குறிப்பிட்டு நம் பயணம் என்றென்றும் தொடரும் என கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.