முகப்பு
செய்திகள்

சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா?

சூர்யா - 45 அப்டேட்...

Updated On : 20 நவம்பர் 2024, 4:20 pm IST
சூர்யா, த்ரிஷா.
பகிர்:

சூர்யா - 45 படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம் தயாராகி வருகிறது. நகைச்சுவையான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடரந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விரைவில், படப்பிடிப்பு துவங்க உள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சூர்யா - 45 படத்தில் நடிகை த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவும் த்ரிஷாவும் இணைந்து நடித்த மௌனம் பேசியதே, ஆறு படங்கள் வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments