செய்திகள்

திருமண நிகழ்வில் சிம்பு, சிவகார்த்திகேயனுடன் தனுஷ்!

நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனுடன் தனுஷ்...

DIN

நடிகர் தனுஷ் நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தன் விவாகரத்துக்கு பிரச்னைகளுக்கு இடையே சில சர்ச்சைகளால் தொடர் தாக்குதலுக்கு ஆளானார். பாடகி சுசித்ரா தனுஷின் நடவடிக்கைகள் குறித்து அளித்த நேர்காணல்களில் தனுஷை கடுமையாகத் தாக்கினார்.

இதற்கிடையே, நடிகை நயன்தாரா தன் திருமணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷ் ஒப்புதல் அளிக்கவில்லை என கடுமையான வார்த்தைகளால் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் நயன்தாரா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது தனுஷ் நடிகர் சிவகார்த்திகேயனை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகர் சிம்புவை சந்தித்த தனுஷ் அவரையும் கட்டியணைத்தார். தனுஷுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவுடன் பிரச்னை இருப்பதாகவே சமூக வலைதளங்களில் நம்பப்பட்டு வந்த சூழலில் இருவரிடமும் தனுஷ் நடந்துகொண்ட விதமும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT