மோகன்லால் இயக்கும் முதல் படத்தில் இசையமைப்பாளரான லிடியன்.  
செய்திகள்

மோகன்லால் இயக்கும் முதல் படம்..! இசையமைப்பாளரான லிடியன்!

நடிகர் மோகன்லால் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் லிடியன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

DIN

மலையாளத்தில் 40 ஆண்டுகள் நடிகராக இருக்கும் மோகன்லால், மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோவின் கதையை இயக்கியதன்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

பரோஸ் என்கிற 3டி படத்தை இயக்கியுள்ளார். இதில் ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இதில் மீரா ஜாஸ்மின், குருசோமசுந்தரம் நடித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன். குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன்லால்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் வரும் டிச.25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் லிடியன் தனது எக்ஸ் கூறியதாவது:

எனக்கு 13 வயதிருக்கும்போதே தன்னுடைய படத்துக்கு இசையமைக்குமாறு லெஜண்டரி நடிகரும் முதல்பட இயக்குநருமான மோகன்லால் அங்கிள் என்னிடம் நம்பிக்கை வைத்து கேட்டார். அவரது நம்பிக்கையினால் இது சாத்தியமாகியுள்ளது.

தனியாக இந்தப் படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சி. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ள ஹாலிவுட் லெஜண்ட் இசையமைப்பாளர் மார்க் கிளியன் அவர்களுக்கும் என்னுடைய சல்யூட் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT