நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 12-வது படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்தவர் விஜய் ஆண்டனி. முதல் படமான, ‘நான்’ படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை அடைந்தார்.
சில படங்கள் தோல்வியடைந்தாலும் விஜய் ஆண்டனிக்கான மார்க்கெட் குறையவில்லை. எப்போதும், கைவசம் சில படங்களை வைத்திருப்பார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகா நடிகை’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது, தன் 12-வது படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘ககன மார்கன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்குகிறார். பான் இந்திய திரைப்படமாக இது உருவாகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனி தன் சகோதரி மகனான அஜய் திஷன் என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்தியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.