செய்திகள்

வணிக தோல்வியைச் சந்தித்த கங்குவா?

கங்குவாவின் வணிகம் குறித்து...

DIN

கங்குவா திரைப்படம் வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சப்தமான பின்னணி இசை மற்றும் வசனங்கள், உணர்ச்சிகளைக் கடத்தாத கதைக்களம் என சில குறைகளால் மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இதனால், படம் வெளியான முதல் நாளிலிருந்தே கடுமையான தாக்குதல்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியளவில் ரூ. 100 கோடியையும் வெளிநாடுகளில் ரூ. 80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், கங்குவா முதல் பாகம் திரையரங்குகளில் வணிக ரீதியாகத் தோல்வியையே சந்தித்துள்ளது. அதேநேரம், ஓடிடி மற்றும் சாட்டிலைட் விற்பனையில் லாபம் ஈட்டியிருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT