அமிதாப் பச்சன், த.செ. ஞானவேல், ரஜினி காந்த்.  
செய்திகள்

அமிதாப் முதல்வரிசை மாணவர்; ரஜினி கடைசிவரிசை மாணவர்..! வேட்டையன் இயக்குநரின் கருத்து!

வேட்டையன் பட இயக்குநர் த.செ. ஞானவேல் அமிதாப் பச்சன், ரஜினி குறித்து கூறியதாவது...

DIN

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் பாடல்களும் வரவேற்பை அடைந்தது.

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது.

அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் புரமோஷன்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தெலுங்கில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ஞானவேல் பேசியதாவது:

அமிதாப் பச்சன் சார் முதல்வரிசையில் உட்காரும் மாணவன் போல அடுத்த நாளைக்கான ஸ்கிரிப்ட் பேப்பரை கேட்டு தொல்லை செய்வார். என்னை மட்டுமல்ல எல்லா இயக்குநர்களிடமும் அப்படித்தான் செய்கிறரென அவரது உதவியாளரும் கூறினார். ஆனால். ஒருமுறை ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிவிட்டால் எந்தக் காட்சியை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். அத்தனையும் மனப்பாடம் செய்துவிடுவார்.

ஆனால், ரஜினிகாந்த சார் கடைசி பென்ச் ( கடைசிவரிசை) மாணவன் போலிருப்பார். ஸ்கிரிப்ட் பேப்பரைக் கொடுத்தாலும் படப்பிடிப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்பார். ஜாலியான மனிதர் ரஜினிசார் என்றார்.

வேட்டையன் படத்தில் நடிகைகள் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ரோஹிணி நடிகர்கள் ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, ரக்‌ஷன், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அனிருத் இசையமத்துள்ளார்.

மனசிலாயோ பாடல் ரீல்ஸ்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT