ரசிகர்களைக் கவராத ஜோக்கர் - 2!
ஜோக்கர் - 2 எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவான ஜோக்கர் - 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் நடிகர் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘ஜோக்கர்’.
ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன்.
Advertisement
Advertisement
ஆனால், ஒருகட்டத்தில் குடும்பமும் சமூகமும் அவனை எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படமே ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலம்.
மேலும், இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
அதே கூட்டணியில் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படத்திற்காக, உலகம் முழுவதும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அக். 2 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி படப்பிடிப்பு தீவிரம்!
காரணம், முதல் பாகத்திலிருந்த அளவிற்கு கதையும், ஜோக்கர் கதாபாத்திரத்தின் வலுவும் இல்லாததாகக் கூறப்படுகிறது. இதனால், இப்படம் பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.