நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, பிரயாகா மார்டின். 
செய்திகள்

போதைப்பொருள் தாதாவுடன் தொடர்பு... ஸ்ரீநாத் பாசி, ‘பிசாசு’ நடிகையிடம் விசாரணை?

போதைப்பொருள் சர்ச்சையில் ஸ்ரீநாத் பாசி...

DIN

பிரபல தாதாவுடன் தொடர்பிலிருந்ததாக நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை பிரயாகா மார்டினிடம் காவல்துறை விசாரிக்க உள்ளதாகத் தகவல்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி. கப்பேலா, கும்பளாங்கி நைட்ஸ், ஹோம், மஞ்ஞுமல் பாய்ஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர். தற்போது, தமிழில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல், பிசாசு படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா மார்ட்டின் நடிப்பில் மலையாளத்தில் சில படங்கள் வெளியாகின. தற்போது பெரிதாக சினிமாக்களில் நடிப்பதில்லை.

இந்த நிலையில், கேரளத்தின் பிரபல போதைப்பொருள் தாதாவான ஓம் பிரகாஷ் கடந்த அக். 6 ஆம் தேதி கொச்சியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைதான ஓம் பிரகாஷ்.

இவர் மதுபானங்கள் மற்றும் கொகைன் போதைப்பொருள் கடத்தலால் அறியப்பட்டவர். காவல்துறை இவரைக் கைது செய்தபோது, அந்த அறையிலிருந்த கொகைன் போதைப்பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து, ஓம் பிரகாஷின் செல்போன் மற்றும் விடுதியின் சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் ஓம் பிரகாஷின் அறைக்கு நடிகர் ஸ்ரீநாத் பாசியும், நடிகை பிரயாகா மார்ட்டினும் சென்று வந்ததாகத் தெரிகிறது. இதனால், காவல்துறை இருவரையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஸ்ரீநாத் பாசி சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கில்லி பட வசூலை முறியடிக்குமா குஷி?

இதயம் தொடரில் நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT