சமந்தா, ஆலியா பட்.  
செய்திகள்

பாலினம் கடந்தவர் சமந்தா..! தெலுங்கில் பேசிய ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் சமந்தாவை புகழ்ந்து பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலிய பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.

ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.

ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட் ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜிக்ரா படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத்தில் நடிகை ஆலியா பட், சமந்தா, ராணா டகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடிகை ஆலியா பட் சமந்தாவை புகழ்ந்து பேசினார்.

ஆலியா பட் பேசியதாவது:

மை டியர் சமந்தா, சினிமாவில் சினிமாவுக்கு வெளியேவும் நீங்கள் ஒரு ஹீரோ. உங்களது திறமை மீதும் மீண்டெழும் குணத்தின் மீதும் பலத்தின் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆண்கள் உலகத்தில் ஒரு பெண் இப்படி இருப்பது எளிதல்ல. நீங்கள் பாலினம் கடந்தவர்.

உங்களது இரண்டு கால்களினால் உயர்ந்து நிற்கிறீர்கள். உங்களது திறமையினால் வலுவாக எட்டி உதைக்கும் உங்களது குணம் அனைவருக்கும் ஒரு சான்றாக இருக்கிறது.

இயக்குநர் திரிவிக்ரம் சார் 6 நொடிகளில் இந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். நானும் சமந்தாவும் த்ரிவிக்ரம் சார் படத்தில் நடிக்க வேண்டும்.

நடிகைகளுக்குள் போட்டி இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. ஒரு பான் இந்திய ஸ்டார் சமந்தா எனது படத்தை புரமோஷன் செய்ய முன்வந்தது எனக்கு மகிழ்ச்சி என்றார்.

தெலுங்கில் பேசிய ஆலியா பட்

எனக்கு தெலுங்கு மொழியுடன் ஒரு புதிய உறவு வந்திருக்கிறது. நல்ல படங்களை பாராட்டுவதில் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேண்டும். குடும்ப உணர்ச்சிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தீவிரமான படம். உங்கள் அனைவருக்கும் எனது முத்தங்கள் என்றார்.

ஜிக்ரா படம் அக்.11ஆம் தேதி வெளியாகிறது. வாசன் பாலா இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT