சுதீர் கோழிக்கோடு, இயக்குநர் ஜியோ பேபி, மம்மூட்டி.  
செய்திகள்

காதல் தி கோர் படத்தில் நெருக்கமான காட்சிகள் வைக்காதது ஏன்? இயக்குநர் விளக்கம்!

இயக்குநர் ஜியோ பேபி காதல் தி கோர் படத்தில் நெருக்கமான காட்சிகள் வைக்காதது ஏன் என விளக்கமளித்துள்ளார்.

DIN

இயக்குநர் ஜியோ பேபி காதல் தி கோர் படத்தில் நெருக்கமான காட்சிகள் வைக்காதது ஏன் என விளக்கமளித்துள்ளார்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கினார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் இப்படம் உருவானது.

தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினரரும் சமூகத்தினரும் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருந்தது காதல் - தி கோர்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜியோ பேபி பேசியதாவது:

நடிகர் மம்மூட்டி என்பதால் நெருக்கமான காட்சிகளை வைக்காமல் இல்லை. படத்தின் நோக்கமே நெருக்கமான காட்சிகள் இல்லாமலே இருவரின் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இரண்டு நபர்கள் காதலில் இருக்கும்போது நெருக்கமான காட்சிகள் வைக்க வேண்டுமென்ற அவசியம் இதில் தேவைப்படவில்லை.

மம்மூட்டி இல்லையென்றால் வேறொரு நடிகரை வைத்து எடுத்திருப்பேன். மம்மூட்டியை தேர்ந்தெடுக்க காரணம் எல்ஜிபிடிக்யூ மக்களின் மீதிருக்கும் பொதுப்படையான பார்வைகளை மாற்ற ஒரு சூப்பர் ஸ்டார் தேவைப்பட்டது. அதனால்தான் அவரை தேர்ந்தெடுத்தோம்.

இந்தப் படத்தின் கதையை அதன் நோக்கத்தை மிகவும் சரியாகப் புரிந்துகொண்டு கண்ணூர் ஸ்குவாட் படத்தின் படப்பிடிப்பைக்கூட தள்ளிவைத்துவிட்டு மம்மூட்டி இதில் நடித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT