பிளாக் பட போஸ்டர்.  
செய்திகள்

நல்ல வரவேற்பில் பிளாக் திரைப்படம்! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள பிளாக் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

DIN

ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து, சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ் போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து, அதிரடிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தன.

மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் ஜீவாவுக்கு பிளாக் படம் இதனை பெற்று தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பொடென்சியல் ஸ்டூடியோஸ் தயாரிதக்க கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

அக்.11 ஆம் தேதி வெளியான நிலையில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டு வருகின்றன.

2ஆம் நாளுக்கான சென்னையிலுள்ள அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதாக எக்ஸில் புகைப்படங்கள் வெளியிட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வலியுறுத்தி முழக்கப் போராட்டம்

இளைஞரை நூதனமாக ஏமாற்றி ரூ.4.6 லட்சம் பணம் பறித்த இருவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் 2 போ் எம்பிபிஎஸ் படிப்புக்குத் தோ்வு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பால் உற்பத்தியாளா் சங்கத்துக்கு உடனடியாக தோ்தல் நடத்த மனு

யாசகம் எடுத்து வந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை - வட்டாட்சியா் அலுவலக ஊழியர் கைது

SCROLL FOR NEXT