நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு எம்புரான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் திறமையானவர்.
சலார் படத்திற்குப் பின் தன் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். இறுதியாக, இவர் நடித்த ’குருவாயூர் அம்பலநடையில்’ திரைப்படமும் வெற்றியைப் பெற்றது.
இதையும் படிக்க: ஆச்சரியப்படுத்தும் லப்பர் பந்து வசூல்!
தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்தில், மோகன்லாலின் உதவியாளராக சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மோகன்லால் சையத் மசூத் கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
லூசிஃபர் போல் எம்புரான் படத்திலும் பிருத்விராஜ் கதாபாத்திரம் பேசப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.