முகப்பு
செய்திகள்

இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்..! இட்லி கடை குறித்து நித்யா!

நடிகை நித்யா தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு குறித்து பேசியுள்ளார்.

Updated On : 17 அக்டோபர் 2024, 12:17 pm IST
தனுஷ் படத்தில் நித்யா மெனன்.
பகிர்:

கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா. அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

இதையும் படிக்க: அமரன் படத்தின் புதிய பாடல்!

Advertisement

Advertisement

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். தற்போது, தனுஷ் இயக்கும் 4-வது படமான இட்லி கடை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதில் தான் நடிப்பதாக தேசிய விருது பெற்றபோது நித்யா அறிவித்தார். பின்னர் தேநீர் அறுந்துவதுபோன்ற புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நித்யா கூறியதாவது:

சில நாள்களுக்கு முன்புதான் நான் இட்லி கடை படத்தில் சில காட்சிகளில் நடித்தேன். இந்தப் படத்தை தனுஷ் இயக்குகிறார். இப்போதுதான் தொடங்கியுள்ளோம். அதனால் வேறு தகவல் எதுவும் கூற இயலாது. நான் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தது என்னுடைய இயல்பு தன்மையிலிருந்து வேறு மாதிரி இருந்தது என்றால் இந்தப் படம் அதைவிட இரண்டு மடங்கு இருக்கும். இதுவரை என்னை யாரும் படம்பிடிக்காத கதாபாத்திரத்தில் தனுஷ் இயக்கிவருகிறார். தனுஷ் எப்போது எனக்கு சவாலான படங்களையே தருகிறார் என்றார்.

சமீபத்தில் தனது பெயர் மேனன் அல்ல மெனன் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.