பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் படம் |எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரத்துடன் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடக்கிறது. கடந்த வார முடிவில் குறைவான வாக்குகள் பெற்று தயாரிப்பாளர் ரவீந்தர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

தற்போது, 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதில், இந்த வாரம் நடிகர் சத்யா கேப்டனாக உள்ளார். இதனால், சத்யாவை வெளியேற்ற முடியாது. எனவே எஞ்சியுள்ள 16 பேரில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்களின் பட்டியலில் (நாமினேஷன்) மொத்தம் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

விஜே விஷால், தர்ஷா குப்தா, செளந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்ணவ், சாச்சனா ஆகிய 10 போட்டியாளர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இதையும் படிக்க | காதலனிடம் அடிவாங்கிய பிக் பாஸ் செளந்தர்யா!

மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், குறைவான வாக்குகளைப் பெற்ற நபர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் விஜே விஷால் மற்றும் செளந்தர்யாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக முத்துக்குமரன், ரஞ்சித், ஜெஃப்ரி, தீபக், ஜாக்குலின், சாச்சனா ஆகியோர் உள்ளனர்.

இந்தப் பட்டியலின்படி, அர்ணவ் மற்றும் தர்ஷா குப்தா பின்தங்கியுள்ளனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வைல்டு கார்டு போட்டியாளராகச் செல்கிறார் அர்ணவ் மனைவி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT