நந்தன் 
செய்திகள்

நந்தன் திரைப்படத்துக்கு அண்ணாமலை பாராட்டு

நந்தன் திரைப்படத்துக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Din

நந்தன் திரைப்படத்துக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு:

ஓடிடிதளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பாா்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்துக்காக பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சா்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

தனது தோ்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சித் தலைவா்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகா் சசிகுமாருக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநா் இரா.சரவணனுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.

பல ஆழமான கருத்துகள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்துக்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT