செய்திகள்

மறுவெளியீட்டில் 1000-வது நாள்! விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை!

விண்ணைத்தாண்டி வருவாயா மறுவெளியீட்டில் சாதனை...

DIN

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மறுவெளியீட்டில் சாதனை புரிந்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான சிறந்த ஆல்பங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது. திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது.

முக்கியமாக, சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் மறுவெளியீட்டில் இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் கொண்டாடுகிறது.

இந்த விஆர் திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக (2.75 ஆண்டு) இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது.

இதுவரை, எத்தனையோ திரைப்படங்கள் மறுவெளியீட்டைக் கண்டாலும் இந்தியளவில் மறுவெளியீட்டில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT