முகப்பு
செய்திகள்

தூங்கு செல்லம்... சிறுவனை உற்சாகப்படுத்திய நயன்தாரா!

நடிகை நயன்தாரா டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தில் நடித்து வருகிறார்...

Updated On : 28 அக்டோபர், 2024 at 3:41 PM
பகிர்:

நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பு விடியோ வைரலாகியுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது. தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இதையும் படிக்க: வீர தீர சூரன் அப்டேட்!

மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில், டியர் ஸ்டூடண்ட்ஸ் இரவு படப்பிடிப்பின்போது சிறுவன் ஒருவன் தன் வீட்டு மாடியிலிருந்தபடி நடிகை நயன்தாராவை அழைக்க, உடனே கீழே இதை கவனித்த நயன்தாரா சிறுவனைப் பார்த்து சைகையால், ‘தூங்கு’ என கூறினார். இதனால், உற்சாகமடைந்த சிறுவன் மற்றும் குடும்பத்தினர் சிரித்து மகிழ்ந்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.