நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இந்தப் படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
கோட் திரைப்படம் உலக அளவில் நாளை (செப்.5) வெளியாகிறது. வெளிநாட்டில் கோட் திரைப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
அஹிம்சா நிறுவனம் வெளியிட்ட விடியோவில் வெங்கட் பிரபு பேசியதாவது:
ஹாய் பிரிட்டன், ஹாய் லண்டன். வெளிநாட்டில் வெளியிடும் அஹிம்சாவுக்கு நன்றி. நான் 19 ஆண்டுகள் அங்குதான் படித்தேன். பிரிட்டன், ஐரோப்பாவில் என்னுடைய பேனர்களை பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. வார்த்தைகளே இல்லை.
இதற்கு முக்கியமான காரணம் தளபதி விஜய்தான். அவருக்கு நன்றி. அத்துடன் ஏஜிஎஸ் அகோரம் சார், அர்ச்சனா அவர்களுக்கும் எனது நன்றிகள். நாளை படம் ரிலீஸ் ஆகிறது. இனிமேல் கோட் படம் உங்களுடையது. மகிழ்ச்சியாக இருங்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.