நடிகை சாய் பல்லவி தங்கைக்கு திருமணம்.  படங்கள்: எக்ஸ், இன்ஸ்டாகிராம் / சாய் பல்லவி பேன்ஸ்.
செய்திகள்

சாய் பல்லவி தங்கைக்கு திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள், விடியோக்கள்!

நடிகை சாய் பல்லவியின் தங்கைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

DIN

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா  முழுவதும் கவனம் பெற்றார்.

சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்தாண்டு ஜனவரி 21இல் வினீத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நடிகை சாய்பல்லவியின் புகைப்படங்கள் நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் அமரன் படத்திலும் தெலுங்கில் தண்டேல் படத்திலும் நடிக்கிறார்.

கார்கி, விராட பருவம் படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது குறித்து சாய் பல்லவி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்கள்.

சாய் பல்லவி ரன்பீர் கபீருடன் இணைந்து ராமாயணம் படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள அமரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT