கங்குவா போஸ்டர்.  படம்: எக்ஸ் / ஸ்டுடியோ கிரீன்
செய்திகள்

3,000-க்கும் அதிக திரைகளில் கங்குவா!

கங்குவா திரைப்படம் வட இந்தியாவில் அதிகமான திரைகளில் வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

DIN

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திட்டமிட்ட தேதிக்கு வெளியிடாமல் ரஜினி படத்தைப் பார்த்து பயப்படுவதா? என தகாத வார்த்தைகளாலும் திட்டி பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:

முதலில் அக்.10 வெளியாகவிருந்தது. வேட்டையன் படம் வரவே ஞானவேல்ராஜா ரஜினி ரசிகர் என்பதால் வேறு நாளில் வெளியாக திட்டமிட்டுள்ளார். ஹிந்தியில் மல்டிபிளக்ஸில் கங்குவா வெளியாகவுள்ளது. 3000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவிருக்கிறது.

வட இந்தியாவில் மாபெரும் ரிலீஸ்

வட இந்தியாவில் ஓடிடியில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாகும். தமிழ்ப் படங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்காததால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகுவதில்லை. ஆனால், கங்குவா மிகப்பெரிய ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இன்னும் 2 மாதங்களில் கங்குவா ரிலீஸ் ஆகும். ஹிந்தியிலும் வெளியாகுவதால் அதற்கும் ஏற்றவாறு ரிலீஸ் தேதியை அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்கள் பேசும்... ஸ்ரவந்திகா!

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... மோக்‌ஷா!

சீனாவின் மேலும் ஒரு பொறியியல் அதிசயம்: உலகின் உயரமான பாலம்..!

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT