ரசிகர்களின் பாராட்டுடன் விடியோ வெளியிட்ட படக்குழு 
செய்திகள்

விஜய் 69: ரசிகர்களின் பாராட்டுடன் விடியோ வெளியிட்ட படக்குழு!

நடிகர் விஜய்யின் கடைசி பட அறிவிப்பு தேதி குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

அந்தப் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசித் திரைப்படம் குறித்த அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் விஜய்யுக்கு சமர்ப்பணமாக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமலுக்கு எழுதிய கதையைதான் விஜய்க்கு எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (செப். 14) மாலை 5 மணிக்கு வெளியாகும். கடைசி படம் என்பதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள்.

கடைசிப் படம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், தனது 69-ஆவது படமே கடைசிப் படமாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தை ஹெ.வினோத் இயக்கவுள்ள நிலையில், அரசியல் அல்லது சமூக பிரச்னையை மையமாக கொண்ட கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT