ஃபகத் ஃபாசில் கதாபாத்திர அறிமுக விடியோ.  படங்கள்: எக்ஸ் / லைகா புரடக்‌ஷன்ஸ்
செய்திகள்

வேட்டையன்: ஃபகத் ஃபாசில் கதாபாத்திர அறிமுக விடியோ!

நடிகர் ஃபகத் ஃபாசிலின் வேட்டையன் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

DIN

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஃபகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்துள்ளார்.

இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஃபகத் ஃபாசிலின் வேட்டையன் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்.10 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளது.

வேட்டையன் கதாபாத்திரங்கள்

துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டிருந்தது.

தற்போது, ஃபகத் ஃபாசில் பாட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை தீவிரமடைவதற்குள் வடிகால்களை தூா்வார அமைச்சா் அறிவுறுத்தல்

சிவப்பும் அழகும்... தீப்தி சதி!

உஷ்... மீண்டும் வருக... அஞ்சு குரியன்!

வெளிநாட்டில் தங்கம் வாங்க திட்டமா? எச்சரிக்கை! | Cyber Alert | Cyber Security

என் இதயமே... நைலா உஷா!

SCROLL FOR NEXT