சல்மான் கானுக்கு ஒரே நாளில் இரண்டு கொலை அச்சுறுத்தல்கள் நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறி, ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், மெஹபூப் ஸ்டுடியோவிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார், சல்மான் கான். அந்த நேரத்தில், சல்மான் கானின் கான்வாய் காருக்கும் போலீஸாரின் காருக்கும் இடையில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவரை போலீஸார் எச்சரித்தும், அவர் விலகாமல், சல்மான் கானின் காரை நெருங்கும் அளவிற்கு பக்கத்தில் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சல்மான் கான் வீட்டை அடைந்த பின்னர், பின்தொடர்ந்தவரை துரத்திச் சென்று, போலீஸார் அவரை பிடித்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில், அவர் கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.
மேலும், அதிவேகத்தில் பயணித்ததால், பாரதிய நியாயா சன்ஹிதா பிரிவு 125 மற்றும் 281 ஆகியவற்றின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதே நாளில் சல்மான் கானின் தந்தை சலீம் கான், காலையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் உள்பட இருவர், சலீம் கானிடம் ``லாரன்ஸ் பிஷ்னோயை உங்களிடம் அனுப்பலாமா?’’ என்று கூறிவிட்டு ஓடியுள்ளனர்.
அவர்களின் வாகன எண்ணை வைத்து, அவர்களை பிடித்ததில், அவர்கள் இருவரும் விளையாட்டுக்காக அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர்.
அவர்கள் மீதும், பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 292-ன் படி, பொது இடங்களில் தொந்தரவு செய்தல் மற்றும் வேறு சில பிரிவுகளில் ஈடுபட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.