நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் உருவான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாள சினிமா இந்தாண்டிலும் நல்ல திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன.
அந்த வகையில், ஓணம் வெளியீடாக டோவினோ தாமஸின் ஏஆர்எம் மற்றும் ஆசிஃப் அலியின் கிஷ்கிந்தா காண்டம் திரைப்படங்கள் வெளியாகின.
இதில், ஏஆர்எம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக வெற்றியை அடைந்துள்ளது.
அதேநேரம், தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் உருவான கிஷ்கிந்தா காண்டம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் முற்றிலும் எதிர்பார்க்காத மன மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் இதுவரை ரூ. 4.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
நடிகர் ஆசிஃப் அலி தலவன் (thalavan), அடியோஸ் அமிகோ(adios amigo) ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கிஷ்கிந்தா காண்டத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.