இதுமாதிரி எந்தப் படத்திலும் பார்த்ததில்லை..! நந்தன் படத்தைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் நந்தன் படத்தினை பாராட்டி பேசியுள்ளார்.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
Advertisement
இதையும் படிக்க: தக் லைஃப்: ரூ.150 கோடிக்கு விற்கப்பட்ட டிஜிட்டல் உரிமம்?
‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் இன்று வெளியானது. இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியுள்ளார். இதை இயக்குநர் இரா.சரவணனன் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? வைரல் புகைப்படங்கள்!
அந்த விடியோவில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது:
எனது அன்பு அண்ணன்கள் சசிகுமார், இரா.சரவணன் இணைந்து கொடுத்துள்ள அற்புதமான படம்தான் நந்தன். சசிகுமார் சார் புதியதாக வித்தியாசமாக எதாவது செய்திருப்பார் என நினைத்துதான் பார்த்தேன்.
முதல் காட்சியிலேயே பிரமிப்பாக இருந்தது. காட்சியை விளக்காமல் பொதுவாக சொல்கிறேன். எனக்கு இருக்கும் சிற்றறிவை வைத்து சொல்கிறேன். நான் இதுவரை இந்தமாதிரி காட்சியை எந்த சினிமாவிலும் பார்த்ததில்லை. நான் அங்கேயே இந்தப் படம் வேறு மாதிரி ஏதோ சொல்லப்போகிறார்கள் என்பதைப் புரிந்துக்கொண்டேன்.
சசிகுமார் சார் எதார்த்தமாக நடிப்பார். இந்தப் படத்தில் மிகமிக எதார்த்தமாக உண்மைக்கு மிக நெருக்கமாக நடித்துள்ளார்.
அதிகமான இடங்களில் சிரித்தேன், கண் கலங்கினேன். கடைசியில் வேகமாக கை தட்டினேன். இதையெல்லாம் சாத்தியப்படுத்தியது இரா.சரவணனின் எழுத்தும் அவரது குழுவின் உழைப்பும்தான் என்றார்.