நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர்.
களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக இருக்கிறார்.
பல மொழிகளின் முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கமல்ஹாசன் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி வியந்துகொண்டே இருக்கின்றனர்
இதையும் படிக்க: புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? வைரல் புகைப்படங்கள்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் டப்பிங் பணிகளை மேற்கொண்ட விடியோ வெளியானது.
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.149.7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தாண்டு மே மாதம் திரைக்கு வருமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: யாருக்கான போராட்டம்...? நந்தன் - திரை விமர்சனம்!
படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரபூர்வ தகவல் அளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.