தண்டகாரண்யம் போஸ்டர்.  
செய்திகள்

தண்டகாரண்யம் முதல் பார்வை போஸ்டர்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு  படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் படத்தை இயக்கியுள்ளார்.

நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டூடியோ மற்றும்  லேர்ன் அன்ட் டீச் புரடக்சன்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கிறார்கள். 

இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தினேஷ் பிறந்தநாளை தண்டகாரண்யம் படத்தின் முதல்பார்வை போஸ்டர் முன்னிட்டு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT