செய்திகள்

தேவரா - வியப்பில் ஆழ்த்தும் முதல் நாள் வசூல்!

தேவரா வசூல்...

DIN

ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான தேவரா படத்தின் முதல் நாள் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆரின் 30வது படமான தேவரா வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஆந்திரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியிலிருந்து துவங்கிய முதல் காட்சியிலிருந்தே ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் முதல் நாள் வசூலாக ரூ. 172 கோடியை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் மத்திய அரசு ஊழியா் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

ஜெருசேலம் புனிதப் பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

‘ரோலா் ஸ்கேட்டிங்’கில் வெற்றி பெற்ற தஞ்சாவூா் மாணவா்களுக்கு வரவேற்பு

தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய்ப் பகுதியில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது லாரி மோதல்

தேனியில் டிச. 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT