நடிகர் ஷாருக்கான். 
செய்திகள்

ஓய்வை அறிவிப்பீர்களா? கரண் ஜோஹர் கேள்விக்கு ஷாருக்கான் பதில்!

நடிகர் ஷாருக்கான் பேச்சு வைரல்...

Sivashankar

நடிகர் ஷாருக்கான் ஓய்வு குறித்து அசத்தலான பதிலைக் கூறியுள்ளார்.

இந்தியளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஐஃபா (iifa) விருது நிகழ்வு அபுதாபியில் நேற்று (செப்.28) நடைபெற்றது. இதில், சிறந்த படங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பொன்னியின் செல்வனுக்காக நடிகர் விக்ரம் சிறந்த நடிகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ. ஆர். ரஹ்மானுக்குக் கிடைத்தது.

நிகழ்வில், நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு மேடையை ரசிக்கும்படியாக மாற்றினார். குறிப்பாக, நடிகர் விக்கி கௌஷலுடன் இணைந்து புஷ்பா படத்தில் இடம்பெற்ற, ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தொடர்ந்து, நிகழ்வின்போது தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹருடன் ஷாருக்கான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஷாருக், “சச்சின், சுனில் சேத்ரி, ரோஜர் பெடரர் போன்ற லெஜண்ட்களுக்கு எப்போது ஓய்வை அறிக்க வேண்டும் எனத் தெரியும்.” என்றார்.

அதற்கு கரண் ஜோஹர், ”பிறகு நீங்கள் ஏன் ஓய்வு முடிவை எடுக்கவில்லை” எனக் கிண்டலாகக் கேட்டார்.

அதைக்கேட்ட ஷாருக்கான், “நானும் தோனியும் வித்தியாசமான லெஜண்டுகள். முடிவை எடுத்த பிறகும் 10 ஐபிஎல் விளையாடுவோம்” என்றார். இதைக் கேட்ட பலரும் விசிலடித்து உற்சாகமளித்தனர்.

இதற்கிடையே, நடிகர் விக்கி கௌஷல், “லெலஜண்டுகளுக்குத்தான் ஓய்வு. ராஜாக்கள் என்றுமே நிலையானவர்கள்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT