செய்திகள்

வேலையே போனாலும் தளபதியைப் பார்க்க வாருங்கள்... சர்ச்சையில் புஸ்ஸி ஆனந்த்!

சர்ச்சையில் புஸ்ஸி ஆனந்த்...

DIN

நடிகர் விஜய் குறித்து புஸ்ஸி ஆனந்த் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தவெக கொள்கை விளக்க முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்.27-இல் நடைபெறவுள்ளது. தவெக மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, பெண்கள் அதிகம் கலந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை தவெக கட்சியின் பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய புஸ்ஸி ஆனந்த், “ அக். 26 மற்றும் 27 ஆம் தேதியில் தளபதியை சந்திக்க வர வேண்டும். நிர்வாகி ஒருவர் தன் முதலாளியிடம் அந்த நாளில் விடுமுறை கேட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் வேலை செய்யும் ஊழியருக்கு 2 நாள் விடுமுறை மறுக்கப்பட்டிருக்கிறது.

வேலையை விட்டால் போனஸ் கிடைக்காது என்கிற நிலையிலும் நம் நிர்வாகி நீயும் வேண்டாம், உன் வேலையும் வேண்டாம் என தளபதிக்காக வேலையை விட்டிருக்கிறார். இப்படி உண்மையான தொண்டர்கள் தவெக கட்சியில் மட்டுமே இருக்கிறார்கள். தளபதியே நேரில் வந்து அழைத்ததுபோல் அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்” எனக் கூறினார்.

தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கட்சியின் பொதுச்செயலரே இப்படி பேசலாமா? என புஸ்ஸி ஆனந்த்தின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT