முகப்பு
செய்திகள்

கதாநாயகனாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. 

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஷ்ருதிஹாசன் இணைந்திருக்கும் புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

’இதுவே ரிலேஷன்ஷிப் (relationship)’ என்கிற அறிவிப்பு வரியுடன் இப்போஸ்டர் வெளியாகியுள்ளதால் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் நாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.