முகப்பு
செய்திகள்

குதிரையேற்ற பயிற்சியில் சமந்தா!

நடிகை சமந்தா குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 3:59 PM
பகிர்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால்  சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Advertisement

மேலும், அவர் தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமந்தா குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வரும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். இது, புதிய படத்திற்காகவா இல்லை தனிப்பட்ட பயிற்சிக்காகவா என்பது தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.