செய்திகள்

ஹார்ட் பீட் - 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஹார்ட் பீட் இணையத் தொடரின் 2-ஆம் பாகம் குறித்து....

DIN

ஹார்ட் பீட் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளிட்டவற்றை மையக்கருவாக வைத்து இத்தொடர் எடுக்கப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் ஒளிபரப்பப்பட்ட இணையத் தொடர் ஹார்ட் பீட்.

இந்நிலையில், ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து 2ஆம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடர் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இந்தத் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியானேஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இந்த வெப் தொடரை டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2024 மார்ச் - ஆகஸ்ட் வரை ஹார்ட் பீட் முதல் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நானி படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT