ரஜிஷா விஜயன் 
செய்திகள்

உடல் எடையைக் குறைத்த ரஜிஷா விஜயன்!

ரஜிஷா விஜயன் உடல் எடையைக் குறைத்துள்ளார்...

DIN

நடிகை ரஜிஷா விஜயன் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

தமிழ், மலையாளத்தில் நாயகியாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன். 2016-ல் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஜெய் பீம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

தொடர்ந்து, தி ஃபால்ஸ் ஐ (the false eye), கோ கோ (kho kho), லவ்ஃபுல்லி யுவர்ஸ் வேதா (lovefully yours veda) ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான டொபின் தாமஸைக் காதலிப்பதாக அறிவித்தார்.

இதற்கிடையே, ரஜிஷாவின் உடல் நிலை பிரச்னைகளால் அவரது எடை அதிகரித்தபடியே இருந்தது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாகக் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டால் 15 கிலோ வரை எடையைக் குறைத்து மெலிதான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவருடைய உடற்பயிற்சியாளர் பகிர்ந்த புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள், ரஜிஷாவைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT