அஜித்துடன் அர்ஜுன் தாஸ்.  படம்: எக்ஸ் / அர்ஜுன் தாஸ்.
செய்திகள்

இந்தப் புகழுக்கு காரணம் நானல்ல... அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி!

நடிகர் அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து பேசியதாவது...

DIN

நடிகர் அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஏப்.10ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது.

கலவையான விமர்சனம் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளதால் முதல்நாளில் தமிழ்நாட்டில் ரூ.38 கோடி வசூலித்துள்ளது.

இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அர்ஜுன் தாஸ் கூறியதாவது:

ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி. மிகவும் தன்னடக்கமாக உணர்கிறேன். இந்தப் பாராட்டுகள் என்னைச் சேர்ந்ததல்ல. 2013இல் இருந்தே என் மீது நம்பிக்கை வைத்த அஜித் சார், என்னை நம்பி படத்தில் வாய்ப்பளித்த சகோதரர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே சேரும்.

அதிக நேசங்களுடன் ஜேஜே எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் ஜானி, ஜேமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் ஜேஜே எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT