செய்திகள்

25-வது மணநாளைக் கொண்டாடிய அஜித் - ஷாலினி!

அஜித் - ஷாலினி இணை திருமண நாளைக் கொண்டாடினர்...

DIN

நடிகர் அஜித் - ஷாலினி இணை தங்களின் 25- வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.

தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் அமர்க்களம் படப்பிடிப்பின்போது தன்னுடன் இணைந்து நடித்த ஷாலினியைக் காதலிக்கத் துவங்கினார்.

இருவரும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோக்‌ஷா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவரும் பள்ளிப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்குப் பின் ஷாலினி சினிமாவிலிருந்து விலகினாலும் அஜித் தற்போதுவரை தனக்கான வணிகத்தை தக்க வைத்திருக்கிறார். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

இந்த நிலையில், திருமணம் முடிந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று (ஏப். 24) தங்களின் திருமண நாளை இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான விடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT