செய்திகள்

குக் வித் கோமாளி - 6 ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்பாக...

DIN

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் நீங்குவதாக ரசிகர்களால் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்த இருந்த நிலையில், இந்த சீசனில் புதிதாக சமையல் கலைஞர் கெளசிக்கும் பங்கேற்கவுள்ளார்.

தொடர்ந்து ஆறாவது சீசனாக ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சீசன்களில் கோமாளிகளாக(சமையல் தெரியாதவர்) பங்கேற்ற புகழ், ராமர், சரத், சுனிதா, குரேஷி இவர்களுடன் புதிய கோமாளிகளாக நடிகை செளந்தர்யா, பாடகர் பூவையார், யூடியூப் பிரபலம் சர்ஜின், நடன கலைஞர் டோலி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வீட்டில் குடும்பப் பெண், வெளியே புரட்சிப் பெண்: தேஜஸ்வினியின் புதிய தொடர் அயலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT