நடிகர் ஜெயராமும் அவரது மகன் காளிதாஸும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள்.
ஆகாஷங்கள் ஆயிரம் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மலையாளத்தின் மூத்த நடிகராக இருக்கும் ஜெயராம் (59 வயது) தனது மகனுடன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார்.
கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து 2003-இல் ’என்ட வீடு அப்புவிண்டேயும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இதற்காக காளிதாஸுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருது கிடைத்திருந்தது.
ஆகாஷங்கள் ஆயிரம் என்ற இந்தப் படத்தினை தமிழில் ஆசைகள் ஆயிரம் என்றும் வெளியாகவிருக்கிறது.
ஸ்ரீகோகுலம் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜி.பிரஜித் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதையை ஜூட் அந்தோனி, அரவிந்த் ராஜேந்திர இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
ஜெயராம் கடைசியாக கேம் சேஞ்சர், ரெட்ரோ படத்திலும் நடித்திருக்க, காளிதாஸ் ஜெயராம் ராயன் படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் அறிமுகமான காளிதாஸ் ஜெயராம், பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.