செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!

டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் டாம் சாக்கோ நடிப்பில் உருவாகியுள்ள சூத்ரவாக்யம் என்ற மலையாள திரில்லர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகை வின்சி அலோசியஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓடிடி வெளியீடு...

ரெஜின் எஸ் பாபு, விக்னேஷ் ஜெயகிருஷ்ணன் இணைந்து இந்தப் படத்துக்க்கான திரைக்கதையை எழுத யூஜின் ஜோஸ் சிரம்மெல் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஜூலை 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படம் அமெரிக்க ஓடிடி நிறுவனமான லயன்ஸ்கேட் பிளேவில் ஆக.21 முதல் வெளியாகிறது. இதில் தமிழ், கன்னடா, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

பிரபலமான அமேசன் பிரைமிலும் வரும் ஆக.27ஆம் தேதி முதல் இந்தப் படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டு...

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் சாம் டாக்கோ தன்னிடம் தவறாகப் பேசியதாகவும் நடந்துகொண்டதாகவும் வின்சி அலோசியஸ் புகார் தெரிவிந்திருந்தார்.

இந்தப் புகாருக்கு டாக் சாக்கோ மன்னிப்புத் தெரிவித்திருந்தார். அதேசமயத்தில்தான் அவர்மீது போதைப் பொருள் புகாரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பீஸ்ட் படத்தில் அறிமுகமான இவர் ஜிகர்தண்டா 2, குட் பேட் அக்லி படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் மட்டும் இடிவி வின் தளத்தில் வெளியாக தமிழில் இரண்டு ஓடிடியிலும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடனிருப்பவர் எல்லாம் உறவினர் அல்ல... ரேஷ்மா!

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

கடல் காற்றும், கடல் உப்பும்... ஆலியா பட்!

நெகிடி 5 விக்கெட்டுகள்: தொடரை வென்றது தெ.ஆ.!

SCROLL FOR NEXT